Cinema News
இது எப்ப நடந்துச்சு!.. உலகை சுற்றும் தல அஜித்…வைரல் புகைப்படம்….
நடிகர் அஜித்திற்கு சினிமாவில் நடிப்பது தொழில் மட்டுமே. மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற பல விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர் அவர். ஹைதராபாத்தில் வலிமை படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கிருந்து சென்னைக்கு பைக்கிலேயா தனியாக வந்தவர் அஜித்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து முடிந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டது. ஆனால், அஜித் ரஷ்யாவில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் செய்யும் குழுவை சந்தித்து அவர்களோடு இணைந்து பைக் டிரிப் செய்துவிட்டுதான் சென்னை வந்தார்.
அதோடு, 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை பைக் மூலமாகவே சுற்றி வந்த பெண்ணான மாரல் யசர்லோவை டெல்லியில் அஜித் சந்தித்து பேசினார். எனவே, அஜித்தும் இது போல ஒரு நாள் பைக் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே பைக் பயணம் மேற்கண்ட அஜித் சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை சென்றார். அங்கு ராணுவ வீரர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
அதேபோல், தாஜ்மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியானது. அதேபோல், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனத்தில் பைக்கில் நிழலில் அவர் மணலில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஏனெனில், எங்கோ ஒரு காட்டில் ஒரு உயரமான இடத்தில் அவர் நின்று கொண்டிருக்கிறார். இது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து, கூடவே The lion king படத்தில் உயரத்தில் நிற்கும் சிங்கம் புகைப்படத்தை பகிர்ந்து தல அஜித்தும் சிங்கம்தான் என பதிவிட்டு வருகின்றனர்.