திருந்திட்டாங்கப்பா… ஆக்சிடண்ட்டிற்கு பிறகு ஐம்புலங்களை அடக்கிய யாஷிகா!

Published on: October 27, 2021
Yashika
---Advertisement---

நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் பதிவு!

அடல்ட் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானதால் என்னவோ யாஷிகா மீதான ரசிகர்களின் பார்வை ஒரு கில்மா நடிகை போலவே இருக்கிறது. இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு தேடிவந்த வாய்ப்புகள் எல்லாம் ஏடாகூடமான காட்சிகளாகவே இருந்தது.

அதையெல்லாம் தட்டி கழிக்காமல் நடித்த யாஷிகா நிஜத்திலும் அப்படியே இருந்து வந்தது தான் அவரின் அடையாளமாக அது மாறியது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்ற யாஷிகா திரும்பி வரும் போது அவரது கார் விபத்துக்குள்ளாகி அவருடன் இருந்த தோழி பாவனி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

yashikaa
yashikaa

இதையும் படியுங்கள்:இப்ப நான் ரொம்ப ஹேப்பி!… கிளாமர் ததும்பும் நடிகை சமந்தா….

அந்த விபத்தில் யாஷிகாவுக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் மாதக்கணக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து #takemeback என கூறி பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்தால் ஆக்சிடண்ட்டிற்கு பிறகு அம்மணி கொஞ்சம் அடக்கித்தான் வசிக்கிறார் போல…. தெளிவா தெரியுது.

Leave a Comment