Cinema News
இப்ப நான் ரொம்ப ஹேப்பி!… கிளாமர் ததும்பும் நடிகை சமந்தா….
தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் நாக சைத்தன்யாவிடமிருந்து பிரிந்தார். எனவே, ஊடகங்கள் இதுபற்றியே பேசின.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. சமீபத்தில் சமந்தா அதை உறுதி செய்தார். அதன்பின் அவரின் விவாகரத்து பல தகவல்கள் வெளியாகியது.
ஆனால், அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டார் சமந்தா. திரைப்படங்களில் நடிப்பது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, போட்டோஷூட்டில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கன் நடிக்கும் ஹிந்தி படத்தில் நயன்தாரா விலகும் நிலையில் அவருக்கு பதில் சமந்தா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவப்பு நிறத்தில் கோட் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.