Connect with us
thamarai

Bigg Boss

தாமரை குளிக்கும் போது கொடுமைப்படுத்திய போட்டியாளர் – கமல் இதை தண்டித்தே ஆகணும்!

பிக்பாஸ் வீட்டில் வெடித்த ரணகளம் – சுவாரஸ்யத்தை தூண்டும் நிகழ்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் நாணயம் கடத்தல் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஐந்து நாணயங்கள் வைக்கப்பட்டு அதைப் பாதுகாப்பது ஒரு குழுவின் கடமை என்றும், மற்றொரு குழு அதைத் திருடி கேமரா முன்பு காட்ட வேண்டும் என்பதே இந்த போட்டி.

இதில் அதிகமான நாணயங்கள் கைப்பற்றியவர்கள் இந்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என பிக்பாஸ் தெரிவித்தார். இதையடுத்து நாணயம் திருடுதலில் மும்முரமாக இறங்கியுள்ள போட்டியாளர்கள் அதை கைப்பற்ற எந்த எல்லைக்கு வேணாலும் போவது தான் பிக்பாஸ் வீட்டில் இப்போது ரணகளமாகியுள்ளது.

thamarai

thamarai

நேற்று தாமரை குளித்துக்கொண்டிருக்கும் போது அவரின் நாணயத்தை ஸ்ருதி திருடிக்கொண்டார். அப்போது அது தெரிந்தும் தாமரையால் ஓடி வந்து பிடுங்க முடியவில்லை. காரணம் தாமரை குளியல் அறையில் உடை இல்லாமல் இருந்தார்.

இதையும் படியுங்கள்: இப்ப நான் ரொம்ப ஹேப்பி!… கிளாமர் ததும்பும் நடிகை சமந்தா….

இதை பவானி உதவியோடு தான் ஸ்ருதி திருடியிருக்கிறார் என ஒரு கூட்டம் கூறி வருகிறது. ஆனால், பாவனியும் ஸ்ருதியும் இல்லை என கூறி மறுக்கின்றனர். எனவே கமல் இந்த வாரம் இதை கண்டித்து கேட்டு பாவனிக்கு ஒரு குறும்படம் போட்டாகவேண்டும் என ஆடியன்ஸ் கொந்தளித்து வருகின்றனர்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Bigg Boss

To Top