5 ஆவது முறையாக ரீமேக் செய்யப்படும் தனுஷ் & வெற்றிமாறன் திரைப்படம் !

Published on: January 14, 2020
---Advertisement---

327589df9b788886ec7c6ec8c7b50dea

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் முதன் முதலாக உருவான பொல்லாதவன் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் கூட்டணி என்று கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியாக கருதப்படுகிறத. இவர்கள் இருவரின் நட்பு முதன் முதலில் தொடங்கியது பொல்லாதவன் திரைப்படத்தில் தான்.  வளர்ந்துவரும் ஹீரோவாக இருந்த தனுஷ் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது பொல்லாதவன் திரைப்படம் தான்.

1af76b9094344aa2bf2fa5dd97fd9a5d-2

அதன்பின் அவர்கள் கூட்டணியில் ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்கள் உருவாகி ஹிட்டாகின. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் வெளியாகி 9 ஆண்டுகள் கழித்து பொல்லாதவ nbvfcன் படம் இந்தியில் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை சேகர் சூரி இயக்கியுள்ளார்.வரும் பிப்ரவரி 28ஆம் தேதி பிரமாண்டமாக இந்த படம் ரிலீசாக உள்ளது. பொல்லாதவன் திரைப்படம் இதற்கு முன்னதாக கன்னடம் தெலுங்கு பெங்காலி சிங்களம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

guns2bof2bbanarsh2bfront2bmen2b20x102bposter2bmarge2bposter-1

Leave a Comment