
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் தர்பார். இப்படம் கடந்த 9ம் தேதி வெளியானது. பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அதுவும் மும்பை கமிஷனர் வேடத்தில் நடித்துள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சிவகங்ககை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்க அம்மாவட்ட எஸ்.பி. ரோகித் நாதன் அம்மாவட்டத்தில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் தங்கள் குடும்பத்துனருடன் தர்பார் படத்தை பார்க்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி அவர்கள் தர்பார் திரைப்படத்தை பார்த்து ரசித்தனர். அவர்களுக்காக காலை 10 மணி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.