கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்… திரையுலகினர் இரங்கல்…

Published on: October 29, 2021
punit
---Advertisement---

கர்நாடகாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராஜ்குமார். அவருக்கு மொத்தம் 3 மகன்கள். அதில் மூத்தவர் ஷிவ் ராஜ்குமார். அவரின் சகோதரர் புனித் ராஜ்குமார். இருவருமே நடிகர்கள். தந்தையின் மறைவுக்கு பின் அவர்கள் இருவரும் கன்னட சினிமாவில் முக்கிய இடங்களை பிடித்தனர். இதில், புனித் ராஜ்குமார் கன்னட சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனவே, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

punit

இந்த சம்பவம் அவரின் ரசிகர்களுக்கும், கன்னட சினிமா உலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்களும், சினிமாத்துறையை சேர்ந்தவர்களும் பதிவிட்டு வந்தனர். ஆனால், அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியானது.

இந்நிலையில், தற்போது அவர் மரணமடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கன்னட சினிமா உலகினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

punit

புனித் ராஜ்குமாரை ரசிகர்கள் பவர் ஸ்டார் என அழைத்து வந்தனர். இவருக்கு வயது 46. சிறு வயது முதலே இவர் திரைப்படங்களில் நடித்து வந்தார். தொலைக்காட்சி தொகுப்பாளர்,நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை உடையவராக அவர் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment