தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நிவேதிதா சதிஷ். ஜோதிகா, ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோர் நடித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Also Read
சில்லு கருப்படி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த நிலை மாறும் மற்றும் செத்தும் ஆயிரம் பொன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘உடன்பிறப்பே’ படத்தில் ஜோதிகாவின் மகளாக நடித்து கவனம் ஈர்த்தார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியானது.

திரைப்படங்களில் நாகரீகமாக நடிக்கும் நிவேதிதா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேறு ரகம். சமீபத்தில் தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைக்கண்ட ரசிகர்கள் இவரா அவர்? என மிரண்டு போயுள்ளனர்.




