Connect with us
mysskin

Cinema News

டியர் புனித் நீ ஒரு நடிகன் மட்டுமல்ல!.. இயக்குனர் மிஷ்கின் உருக்கம்….

கர்நாடகாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் ராஜ்குமார். அவருக்கு மொத்தம் 3 மகன்கள். அதில் மூத்தவர் ஷிவ் ராஜ்குமார். அவரின் சகோதரர் புனித் ராஜ்குமார். இருவருமே நடிகர்கள். தந்தையின் மறைவுக்கு பின் அவர்கள் இருவரும் கன்னட சினிமாவில் முக்கிய இடங்களை பிடித்தனர். இதில், புனித் ராஜ்குமார் கன்னட பவர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் நேற்று உயிரிழந்தார். இது கன்னட சினிமா உலகினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் புனித் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

punit

இந்நிலையில், இயக்கனர் மிஷ்கின் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

புனித் ராஜ்குமாரின் மறைவு என்னை உருக்குலைத்துவிடது. சில வருடங்களுக்கு முன்பு என்னை தொலைப்பேசியில் அழைத்து ஒரு புதிய படம் பற்றி பேசினார். நான் பெங்களூர் சென்று அவருக்கு ஒரு கதை கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அந்த கதை அதிக பட்ஜெட் பிடிக்கும் என்பதால் நடக்கவில்லை. என்னை வழி அனுப்ப பார்க்கிங் வரை வந்தார். இருவரும் கட்டி அணைத்துக்கொண்டோம். விரைவில் ஒரு படத்தில் இணைவோம் என அவர் கூறியிருந்தார்.

டியர் புனித். நீ ஒரு சினிமா ஹீரோ மட்டும் அல்ல. நீ ஒரு உண்மையான ஹீரோ. உன்னுடைய இரக்கம், நேர்மை, உயர்ந்த பன்பு மற்றும் உண்மையாக நடந்து கொள்ளும் உன் குணம் உனக்கு பல நண்பர்களையும் மில்லியன் கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. நீ ஒரு தூய்மையான குழந்தை எனவே இயற்கை தாய் அதன் மடியில் உன்னை வைத்துகொள்ள விரும்பிவிட்டது. உன்னை வாழ்நாள் முழுவதும் நாங்கள் நினைத்துக்கொண்டிருப்போம்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top