மீண்டும் ஒரு சாதனை படைத்த தளபதி விஜய்… அட! இது செம மாஸ் ஆச்சே!!

Published on: October 31, 2021
vijay
---Advertisement---

‘கைதி’ படத்தின் வெற்றியையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

கொரோனா பரவல் காரணமாக மூடியிருந்த தியேட்டர்களுக்கு இப்படம் புத்துயிர் கொடுத்தது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் கதாபாத்திரத்தை விட விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருந்ததாக பேசப்பட்டது.

vijay-aniruth
vijay-aniruth

இப்படத்தில் சிறு வயது பவானியாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் கேரக்டரும் நல்ல பெயரைப்பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாந்தனு, ’96’ கவுரி கேரக்டர் ரசிகர்களை ஏமாற்றியது. இப்படத்தில் மாளவிகா மோகனும், ஆண்ட்ரியாவும் எதற்காக நடித்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

அவர்கள் இருவரது கேரக்டரும் படத்தில் அந்த அளவிற்கு வலுவாக இல்லை. ஆனால், இப்படத்திற்கு பெரிய ப்ளஸ் அனிருத்தான். அனிருத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையும் படிங்க: மாலத்தீவிலிருந்து தம்மாத்தூண்டு கவர்ச்சி காட்டிய ஷிவானி.. அழகு அள்ளுது!

படம் வெளியாகும் முன்பே ‘வாத்தி கம்மிங்’ பாடல் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் படத்தின்மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த பாடலுக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு இப்பாடலுக்கு நடனமாடி தங்கள் ஆதரவை கொடுத்தனர்.

இந்நிலையில், இப்பாடல் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, தற்போது வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 2.8 மில்லியன் லைக்குகளை பெற்று அசத்தி உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment