Connect with us
ajith son

latest news

செம க்யூட்!.. அப்பாவை போலவே குட்டி தல!.. தாறுமாறா வைரலாகும் புகைப்படம்….

நடிகர் அஜித்திற்கு நடிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற பல விஷயங்களில் ஆர்வம் உண்டு. எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை தவறாமல் செய்து வருபவர்.

ajith

சமீபத்தில், 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை பைக் மூலமாகவே சுற்றி வந்த பெண்ணான மாரல் யசர்லோவை டெல்லியில் அஜித் சந்தித்து பேசினார். எனவே, அஜித்தும் இது போல ஒரு நாள் பைக் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ajith7

எதிர்பார்த்தது போலவே பைக் பயணம் மேற்கண்ட அஜித் சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை சென்றார். அங்கு ராணுவ வீரர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனத்தில் பைக்கில் நிழலில் அவர் மணலில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரலானது. அதோடு, எங்கோ ஒரு காட்டில் ஒரு உயரமான இடத்தில் அவர் நின்று கொண்டிருக்கும் புகைப்படமும் வெளியானது.

ajith

மேலும், எங்கோ ஒரு காட்டுப்பகுதியில் மணல் சாலையில் அவர் தனது பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.

தற்போது அவர் பைக் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் நுழைந்ததும் தனது ஹெல்மெட்டை தனது மகனுக்கு அணிவித்து அஜித் அழகு பார்த்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith

Continue Reading

More in latest news

To Top