தீபிகா படுகோனே என்னிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்: யோகா குரு ராம்தேவ்

Published on: January 14, 2020
---Advertisement---

4109d4e6f550813ae54fc010084bcd1e

நடிகை தீபிகா படுகோனே என்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றும் யோகா குரு ராம்தேவ் அவர்கள் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

சமீபத்தில் டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிய போது அந்த போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு கொடுத்தார் நடிகை தீபிகா படுகோனே. தன்னுடைய ’சப்பக்’ படத்தின் விளம்பரத்திற்காக அவர் மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்துவதாக ஒரு சிலர் கூறினாலும் தீபிகாவின் தைரியமான இந்த முயற்சியை பலர் பாராட்டினர். இதனை அடுத்து அவரது நடிப்பில் வெளியான ’சப்பக்’ திரைப்படம் பல சோதனைகளை சந்திக்க நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த யோகா குரு ராஜகுரு, ‘தீபிகா படுகோனே தன்னை ஆலோசகராக நியமித்து தன்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது’என்று கூறினார். நாட்டில் நிலவும் சமூக பிரச்சனை குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னர் அவர் என்னிடம் ஆலோசனை கேட்டு இருக்கலாம் என்றும், இனிமேலாவது அவர் ஆலோசனை கேட்டால்தான் ஆலோசனை தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் 

தீபிகா படுகோனே மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது தவறு என்ற ரீதியில் யோகா குரு ராம்தேவ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகா குரு ராம்தேவின் இந்த கருத்துக்கு தீபிகா என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Comment