சமந்தாவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்துவது அட்லி இல்லிங்க..இந்த டாப் ஹீரோயின்தான்

Published on: November 1, 2021
samantha
---Advertisement---

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்ஸி தமிழ் சினிமாவில் தனுஷ் வெற்றி மாறன் கூட்டணியில் உருவான ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த டாப்ஸி இறுதியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து அனபெல் சேதுபதி என்ற பேய் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் ஒரு காமெடி கலந்த பேண்டசி படமாக உருவாகி இருந்தது. ஆனால் படம் படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தோல்வியை கண்ட டாப்ஸி இனி பேய் படங்களில் நடிக்கவே மாட்டேன் என முடிவு செய்து விட்டார். தமிழில் தான் இப்படி ஆனால் அம்மணி பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதுவரை நடிகையாக மட்டும் வலம் வந்த டாப்ஸி தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆம் சமீபத்தில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய டாப்ஸி சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார் .

tapsee
tapsee

இந்நிலையில் டாப்ஸி அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படமும் நாயகியை மையப்படுத்தி தான் உருவாக உள்ளதாம்.

டாப்ஸி தயாரிக்க உள்ள இந்த படம் மூலம் சமந்தா முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக சொந்த வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை தொடர்ந்து சமந்தா தற்போது படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம். அந்த வகையில் இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Comment