புனித்குமார் விவகாரத்தில் விஷாலுக்கு ரொம்ப பெரிய மனசுதான்.. என்ன செய்தார் தெரியுமா?….

Published on: November 1, 2021
vishal
---Advertisement---

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். இவரை கன்னட திரையுலகம் பவர்ஸ்டார் என அழைத்து வருகின்றனர். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இது கன்னட சினிமா உலகினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் புனித் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இவரின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

புனித்குமார் ஏழை, எளிய மக்களுக்காக 15 இலவச பள்ளிககள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள் மற்றும் 1800 மாணவர்களுக்கு பள்ளி கட்டணத்தையும் அவரே செலுத்தி வந்தார். அவர் மரணம் அடைந்த போது பலரும் இது பற்றி நெகிழ்ச்சியாக குறிப்பிட்டனர்.

vishal

இந்நிலையில், புனித் குமார் பணம் செலுத்தி வந்த 1800 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இதையடுத்து திரையுலகினர் பலரும் விஷாலின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment