டப்பிங் பேசாமல் உயிரிழந்த புனித் ராஜ்குமார்.. படக்குழு என்ன செய்யவுள்ளது தெரியுமா?…

Published on: November 1, 2021
punit rajkumar
---Advertisement---

கன்னட திரையுலகத்தின் பவர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் கடந்த 29ம் தேதி உயிரிழந்தார்.

இது கன்னட சினிமா உலகினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் புனித் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த திரைப்படம் ஜேம்ஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால், புனித் இன்னும் டப்பிங் பேசி கொடுக்கவில்லை. எனவே, படமாக்கப்பட்டபோது அவர் பேசியதை அப்படியே பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

அதற்காக மும்பையில் உள்ள் ஒரு ஒலிப்பதிவு ஸ்டுடியோவின் உதவியை அணுகவுள்ளார்களாம். அதாவது புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி புனித் பேசியதை தரம் உயர்த்தி காட்சியில் இணைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இப்படத்தை ஜேம்ஸ் சேத்தன் என்பவர் இயக்கியுள்ளார்.

punit

ஒருபக்கம் யு டர்ன் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கத்தில் ‘த்வித்வா’ என்கிற புதிய படத்தில் அவர் நடிக்கவிருந்தார். அது இல்லாமல் மேலும் சில படங்களிலும் அவர் நடிக்க திட்டமிட்டிருந்தார். அவர் மரணமடைந்துவிட்டதால் அந்த திரைப்படங்கள் கைவிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment