சரக்கு அடியுங்கள் தீபாவளியை கொண்டாடுங்கள்…. கணவருடன் காஜல் செய்த கன்றாவி வேலை!

Published on: November 2, 2021
kajal agrwal
---Advertisement---

கணவருடன் சரக்கு பாட்டலுக்கு விளம்பரம் செய்த காஜல் அகர்வால்!

இந்திய சினிமா நடிகையான காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அறிமுகமானது முதல் எந்த படமும் ஹிட் அடிக்காமல் அடையாளம் தெரியாத நடிகையாகவே இருந்து வந்த காஜல் அகர்வாலுக்கு 2009ஆம் ஆண்டு வெளியான மகதீரா என்ற தெலுங்கு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

kajal
kajal

இதையும் படியுங்கள்: முடிவுக்கு வந்தது பஞ்சாயத்து.. டிசம்பரில் தொடங்குகிறது தரமான சம்பவம்!

அதையடுத்து அம்மணி தொட்டதெல்லாம் ஹிட் என்றவாறு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதையடுத்து தமிழில் நான் மகான் அல்ல , மாற்றான் , துப்பாக்கி, ஜில்லா, மாரி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இவர் கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து விளம்பரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அதில் கையில் சீட்டு கட்டு வேறு வைத்துக்கொண்டு ” இந்த பண்டிகை காலத்தை “டீச்சரின் 50” மென்மையான சரக்கை உங்கள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுங்கள் இது தீபாவளி பார்ட்டிகளுக்கு சரியான துணை என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். ஒரு முன்னணி நடிகை இப்படியா நடந்துகொள்வது என பலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment