இவர் தான் உண்மையான சந்துரு நீதியரசரின் வரலாற்று வாழ்க்கை குறித்து பார்ப்போம்!
இந்தியா முழுவதும் வழக்குகளுக்காக பழங்குடியினரும் பட்டியலின மக்களும் தலைமுறைகளாக ஒடுக்கப்படும் நிகழ்வு நடந்தேறி கொண்டுதான் இருக்கிறது. நாம் சமூகநீதி சமத்துவம் என்று பேசுகிறோம் பின்வாசலில் அரசாங்கமும் காவல்துறையும், சாதிய சமூகமும் அவர்களை குற்றப்பிண்ணனி கொண்டவர்களாகவே ஜோடித்து இந்த பாகுபட்டினை அமைப்பு ரீதியின் தக்க வைக்கிறது.

டி.ஜே.ஞானவேல் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம் ஜெய் பீம். இருளர் இன சமூகத்தின் ஒடுக்குமுறை பற்றி பேசும் இப்படம் சாதிய ரீதியிலான சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகுபவர்கள் பக்கம் நகராமல் தொடர்ந்து வேட்டையாடப்படும் சமவெளி இருளர்களுக்காக தன் குரலை கொடுத்திருக்கிறது.
ஜெய் பீம் என்ற முழக்கம் வெறும் முழக்கமாக மட்டுமே நிற்காமல் அம்பேத்கர் வழியில் நீதியின் ஒளியாக, சமத்துவத்தின் நம்பிக்கையாக சொல்பட்டிருப்பதற்கே இந்த படத்தை கொண்டாடலாம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் சாத்தியமில்லாத ஒன்றுதான். கடைசி காட்சியில் அல்லி கால் மேல் கால் போடும் போது இந்த படம் சொல்ல வந்த கருத்து வெற்றியடைந்ததாக மனதில் பதிகிறது.

இதையும் படியுங்கள்: லட்டு மாதிரி போஸ் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் – வயசாகியும் வசீகரிக்கும் அழகு!
இப்படத்தின் சந்துரு என்ற வழக்கறிஞசர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா அதில் வாழ்ந்திருக்கிறார். ரியல் ஹீரோவான உண்மையான நீதியரசர் சந்துருவை பிரபல ஊடகம் பேட்டி எடுத்துள்ளது. அதில் செங்கேணி வழக்கை கைவிடச்சொல்லி காவல்துறையினரே சூட்கேஸ் நிறைய தனக்கு பணம் கொடுத்தனர். அதற்கான தண்டனையை அந்த போலீசாருக்கு வாங்கி கொடுத்ததோடு அந்த வழக்கிலும் வெற்றபெற்று இன்று வரலாறு பேசும் நீதியரசராக சிறந்து விளங்குகிறார்.
