சத்தமில்லாமல் சம்பளத்தை உயர்த்திய சமத்து நடிகை…..

Published on: November 6, 2021
tamil actress
---Advertisement---

நடிகர் நாக சைதன்யா உடனான திருமண முறிவுக்கு பின்னர் ஆன்மீக சுற்றுலா சென்று மனதை அமைதிப்படுத்தி வரும் சமந்தா இனி தனது முழு கவனத்தையும் படங்களில் நடிப்பதில் மட்டும் செலுத்த உள்ளாராம். அதோடு இனி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்றும் முடிவு செய்துள்ளார்.

அதன்படியே தற்போது கதைகளையும் தேர்வு செய்து வருகிறார் சமந்தா. அந்த வரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இரண்டு படங்கள் மற்றும் ஹிந்தியில் டாப்சி தயாரிப்பில் ஒரு படம் என சமந்தா அடுத்தடுத்து மூன்று புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.

samanthaaa
samanthaaa

இந்நிலையில் நடிகை சமந்தா திடீரென அவரது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை சமந்தா அவரது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி விட்டாராம். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.

அந்த வகையில் நயன்தாரா தற்போது 5 கோடி சம்பளம் பெற்று வருகிறார். இந்நிலையில் 3 கோடி சம்பளத்துடன் நயன்தாராவிற்கு அடுத்த இடத்தில் சமந்தா உள்ளாராம். இவரது இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் குழம்பி உள்ளனர்.

இந்நிலையில் தான் இதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும், சமந்தாவின் நடிப்பு பாராட்டையே பெற்றது. இதனையடுத்து சமந்தாவின் மார்க்கெட் உயர்ந்து விட்டதாம். அதனால் தான் அவர் சம்பளத்தையும் உயர்த்தி விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment