இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானாம்.. பிக்பாஸ் அப்டேட்….

Published on: November 7, 2021
kamal
---Advertisement---

தமிழில் பிக்பாஸ் நிகழ்சியின் 5வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவர்களில் இமான் அண்ணாச்சி தவிர பலரும் மக்களிடம் பெரிய அறிமுகம் இல்லாதவர்கள்தன். எனவே, எதையாவது செய்து நிகழ்ச்சியை ஓட்டி வருகின்றனர். வழக்கம் போல் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டிற்கு 16 போட்டியாளர்கள்தான் செல்வார்கள். ஆனால், இந்த முறை 18 பேர் சென்றனர். இதில், திருநங்கை நமீதா மாரித்து சொந்த காரணங்களால் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவருக்கு பின் அபிஷேக் ராஜா வெளியேறினார்.

shruthi

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஸ்ருதி வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அதுவும் அவர் அழுது கொண்டே வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Comment