சந்திரமுகி படத்தில் முதலில் நயன்தாராவுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Published on: November 8, 2021
nayanthara-rajini
---Advertisement---

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் தான் அண்ணாத்த. இதேபோல் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பில் வெளியாகி மறக்க முடியாத படமாகவும், திரை வரலாற்றில் திருப்புமுனையாகவும் அமைந்த படம் என்றால் அது சந்திரமுகி மட்டுமே.

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா என பலர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி. திரையரங்குகளில் 300 நாட்களை கடந்து ஓடி புதிய சாதனை படைத்த பெருமையும் இப்படத்தையே சேரும். அந்த அளவிற்கு ஒரு ஹிட் கொடுத்த படம் தான் சந்திரமுகி.

nayanthara
nayanthara

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருப்பார். நயன்தாரா கோலிவுட்டில் அறிமுகமாகி இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் ஜோடி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவர்களின் ஜோடியும் பரவலாக பலரது பாராட்டை பெற்றது. என்னதான் ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகமாகி இருந்தாலும், சந்திரமுகி படம் தான் அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்நிலையில், சந்திரமுகி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது நயன்தாரா இல்லையாம். அதன்படி, முதலில் இந்த படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தேர்வானது மலையாள நடிகை நவ்யா நாயர் என கூறப்படுகிறது. சில காரணங்களால் இவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே, நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது.

naiya nair
naiya nair

இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எந்த படம் யாருக்கு அமைய வேண்டும் என்பது அவரவர் கையில் கிடையாது. எது எப்படியோ சந்திரமுகி படத்தில் தொடர்ந்து ரஜினி நயன்தாரா காம்போ தற்போது தர்பார், அண்ணாத்த வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்துள்ளது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment