கமல்ஹாசனை இயக்கும் ரஜினி பட இயக்குனர்…. அட இவர் ஹிட் இயக்குனராச்சே!

Published on: November 9, 2021
kamal
---Advertisement---

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தற்போது வரை நடிகர்கள் படங்களில் நடிப்பதை போல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சினிமா அரசியல் இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்யும் நடிகர் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் தான்.

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இவ்விரு படங்களை முடித்த பின்னர் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டு முழு நேர அரசியலில் இறங்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்தியன் படத்தை முடித்த பின்னர் கமல் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக வெற்றி மாறன் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது ரஞ்சித் படத்தை முடித்த பின்னர் தான் வெற்றி மாறன் படத்தில் கமல் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

pa ranjith
pa ranjith

அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரஞ்சித் தொடர்ந்து மெட்ராஸ் படம் மூலம் மேலும் பிரபலமானார். இதனையடுத்து காலா, கபாலி என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரஜினியை வைத்து ஹிட் கொடுத்த ரஞ்சித் இறுதியாக ஆர்யாவை வைத்து இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பா.ரஞ்சித் மற்றும் கமல்ஹாசன் இணையும் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment