அஜித் படத்தை பாராட்டிய விஜய்: விரைவில் விஜய் -சிவா கூட்டணி?

Published on: November 10, 2021
vijay
---Advertisement---

தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் என மூன்று மெகா ஹிட் படங்களைக்கொடுத்தவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த முதல் படம் ‘சிறுத்தை’ என்பதால் இதுவே இவரது பெயருக்கு அடைமொழியானது.

சிறுத்தை படத்தையடுத்து தமிழில் அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கினார். இதில் விவேகம் படத்தை தவிர மற்ற அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2019ல் இவரது இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படம் ரஜினியின் பேட்டை படத்தையெல்லாம் முந்தி வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றியே இவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து ரஜினியை வைத்து இவர் இயக்கிய ‘அண்ணாத்த’ படம் தீபாவளி வெளியீடாக கடந்த வாரம் வெளியானது. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் தொடர்ச்சியாக வசூலில் கலக்கி வருகிறது.

வெளியான இரண்டே நாட்களில் இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவிலே முதல் நாளில் அதிகம் வசூலித்த படம் இதுதான் எனவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. இப்படம் வெற்றிபெற்றதையடுத்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகொடுத்து வருகிறார் சிவா.

siruthai siva
siruthai siva

அப்படி சமீபத்தில் பேட்டி ஒன்றி இப்படம் குறித்து பேசிய இவர், விஜய் மற்றும் அஜித் குறித்தும் பேசியுள்ளார். அதாவது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வேதாளம் படத்தை பார்த்துவிட்டு விஜய், சிவாவை அழைத்து பாராட்டினாராம்.

அதுமட்டுமல்லாமல், சிவாவின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் விஜய் பாராட்டி வருவதாக சிவா கூறியுள்ளார். மேலும், விஜய்யை வைத்து படம் இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment