Connect with us
malavika

Cinema News

உங்களுக்கு அது தெரிஞ்சதா..? இந்த வயதிலும் கிளாமரில் குறைவைக்காத மாளவிகா..!!..!!

தல அஜித் நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்தில் சிவகுமார், விவேக், கரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குடும்பக் கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் வெளியான நேரத்தில் நல்ல வெற்றியை பெற்றது.

இப்படத்தின் வெற்றியால் மாளவிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தது. இப்படத்தையடுத்து அஜித்துடன் மீண்டும் ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் படத்தில் நடித்தார். ஆனால், இப்படத்தில் மீனா முதன்மை நாயகியாகவும் மாளவிகா இரண்டாம் நாயகியாகவும் நடித்திருந்தார்.

malavika

malavika

அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார் மாளவிகா. இதையடுத்து தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது. 90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது.

அதன்பின் முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறினார். அந்தவகையில், இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்களில் இவர் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இவர் கவர்ச்சி காட்டி நடித்த படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியைப் பெற்றது.

malavika

malavika

ஒரு கடத்திற்குமேல் படவாய்ப்புகள் இல்லாமல்போனதால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இறங்கினார். திருமணத்திற்கு பின் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வந்தார். தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

அந்தப்படத்தில் இவர் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கிறார். இதில் மாளவிகாவின் அழகைப் பார்த்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். கடைசியாக இவர் 2008ல் ஆயுதம் செய்வோம், மற்றும் ஆறுபடை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top