லெஸ்பியன்களே அதிக விவாகரத்து செய்கின்றனர் … ஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து ஆய்வு முடிவு !

Published on: January 16, 2020
---Advertisement---

ab44c5432cc62ddd4778ee054615af5e

நெதர்லாந்து நாட்டில் ஓரினச்சேர்க்கைத் திருமணம் செய்துகொள்வோர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் 2001 ஆம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன் பின் அங்கு ஆயிரக் கணக்கில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் நடந்து வருகின்றன. இதில் அதிகமாக லெஸ்பியன் எனப்படும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களே அதிக திருமணங்கள் செய்துள்ளார்கள் என்று அறிப்விக்கப்பட்டுள்ளது.

திருமணங்களைப் போலவே விவாகரத்திலும் அவர்களே முன்னிலையில் உள்ளனர். ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை விட அதிகமாக விவாகரத்து செய்துள்ளனர். விவாகரத்துக்கான முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வதுதான் என தெரிகிறது. மேலும் 20 வயதுக்குக் குறைவாக திருமணம் செய்து கொள்பவர்களும் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்களும் அதிகளவில் விவாகரத்து செய்து கொள்கின்றனர்.

Leave a Comment