ரஜினிக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு: பரபரப்பு தகவல்

Published on: January 16, 2020
---Advertisement---

ce8b80c01cd14bc0fd1f675c2a8ef55f

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சமீபத்தில் இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசினார் என்பது தெரிந்ததே. இருவரும் சந்தித்த புகைப்படங்கள் தமிழக மற்றும் சிங்கள ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சந்திப்பை இலங்கை அரசு விரும்பவில்லை என்றும் இந்த சந்திப்புக்கு இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது 

இந்த நிலையில் சென்னையில் ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த் அடுத்த மாதம் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார்

இந்த நிலையில் இதற்கான விசா விண்ணப்பித்தபோது ரஜினிகாந்துக்கு விசா வழங்க முடியாது என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கைகளுக்காகவே அழைத்து வருவதாகவும் இதனை அனுமதிக்க  முடியாது என்றும் இத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்க முடியாது என்றும் இலங்கை அரசு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment