
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையை போக்க அதிகளவில் தண்ணீர் குடிக்கும் 5000 ஒட்டகங்களைக் கொலை செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய சேதங்களை விளைவித்துள்ளது. இந்த கொடூர காட்டுதீயால் பல விலங்குகள், பறவைகள் அழிந்துள்ளன. இந்த தீயை அணைக்க பல கன மில்லியன் தண்ணீர் செலவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் உருவாகியுள்ளது.
மேலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதைப் போக்கும் பொருட்டு அதிகளவில் தண்ணீர்க் குடிக்கும் ஃபேரல் எனும் வகை ஒட்டகங்கள் கொல்ல அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5000 ஒட்டகங்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கொடூர செயலுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.