பிங்க் நிற உடையில் செம மாஸாக போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார்..!!

Published on: November 22, 2021
sri devi
---Advertisement---

நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதியின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் ஒரு காலத்தில் தனது அழகால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டார். அமெரிக்காவில் பிறந்த இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ரிக்சா மாமா” படத்தில் அறிமுகமானவர்.

இதன்பின் பல படங்களில் குலைந்து நட்சத்திரமாக நடித்த இவர் தெலுங்கில் கடந்த 2002ல் வெளியான ஈஸ்வர் படத்தின்மூலம் நடிகையானார். இதன்பின் தமிழில் காதல் வைரஸ், பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

பின்னர் தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கிற்கு சென்றார். அங்கு பல படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் கன்னடாவிலும் கதாநாயகியாக சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் படவாய்ப்புகள் குறையவே 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

sri devi

திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கும் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது சில படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் பிங்க் நிற கோட் சூட்டில் இருக்கும் படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த படத்திற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment