
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் வரும் தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜெயம் ரவி நடித்த ’பூமி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது இந்த நிலையில் சற்று முன்னர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் ’பூமி’ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இதனை அடுத்து ஜெயம்ரவி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஜெயம் ரவி ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கும் இந்த படத்தில் சதீஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்த படத்தை இயக்குனர் லட்சுமணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இமான் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் ஜெயம் ரவியின் அடுத்த வெற்றிப் படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Happy to share the 2nd look of #Bhoomi !! See you in theatres on May 1st! God bless #BhoomiSecondLook#BhoomiFromMay1st@dirlakshman @theHMMofficial @sujataa_hmm @immancomposer @AgerwalNidhhi @venketramg @actorsathish @dudlyraj @prathool @onlynikil @shiyamjack pic.twitter.com/pREAwjtDqi
— Jayam Ravi (@actor_jayamravi) January 16, 2020