ஜெய்பீம்’ இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்த வன்னியர் சங்க தலைவர்!

Published on: November 24, 2021
jothika-surya
---Advertisement---

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெட்ரா படம் ஜெய்பீம். இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் அனைத்து மக்களிடையும் நல்ல வரவேப்பை பெற்றுள்ளது.

ஆனால், வன்னியர் சங்கத்தினர் இப்படத்தின் காட்சிகள் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்னை கிளம்பவே சர்ச்சைக்குரிய அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது. இருந்தும் வன்னியர் சங்கத்தினர் இப்பிரச்சனையை கைவிடுவதாக இல்லை. ஐந்துகோடி நஷ்டஈடு கேட்டு வழங்கி தொடர்ந்தனர்.

இதன்பின்னர் சினிமா உலகினை சேர்ந்த பல பிரபலங்கள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் சினிமாவை வைத்தே பாமகவினர் ஆதாயம் தேடிவருவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரஜினியை வைத்து ராமதாஸ் அரசியல் செய்தார், தற்போது சூர்யாவை வைத்து அன்புமணி அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

njanavel
njanavel

இந்நிலையில் வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி சிதம்பரம் தற்போது நீதிமன்றத்தில் சூர்யா, ஜோதிகா (தயாரிப்பாளர்), ஞானவேல் (இயக்குனர்) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். அதில் அவதூறு பரப்புவது, இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment