பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங் பின்னுக்கு தள்ளப்பட்டது காரணம் ரோஷினியா…?

Published on: November 25, 2021
roshini
---Advertisement---

இதுவரையில் டாப் 10 முதல் இடத்தில் இடம் பிடித்து இருந்த பாரதிகண்ணம்மா சீரியல் இப்பொழுது டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதற்கு காரணம் ரோஷினிக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைப்பதனால் தான் காரணமாம்…

ஏனென்றால், எல்லா வாரங்களிலும் டி.ஆர்.பில் முதலிடம் பிடிப்பது என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான், ஆனால் ஒவ்வொரு வாரமும் டாப் 5 முன்னணியில் இடம் பிடித்திருக்கும் பாரதிகண்ணம்மா இந்த வாரம் டாப் 5யில் கூட இடம் பிடிக்காத காரணத்தால் மொத்த குழுவினரும் மனமுடைந்து போய் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ரோஷினி சீரியலை விட்டு விலகியது தான் காரணமாம்.

barathi kannama
barathi kannama

விஜய் டிவி சீரியலில் ரொம்ப பிரபலமான சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான், மக்கள் மத்தியில் அந்த சீரியல் பிராண்ட் ஆகவே மாறிவிட்டது.

இதுவரை இந்த சீரியலின் பாரதிகண்ணம்மா வாக நடித்து வந்த “ரோஷினி ஹரிப்ரியா” தனக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்ததால் சென்ற மாதம் ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார், இந்த செய்தியை கேட்ட பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மத்தியில் பெரிய ஏமாற்றமும், விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.

அதைப்போல ரோஷினி க்கு பதிலாக ரோஷினி போலவே இருக்கும்‌ வினுஷா தேவி என்பவரை கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ரோஷினி விலகி, வினுஷா தேவி உள்ளே வந்தவுடன், டாப் 5 வரிசையில் இருந்து டாப்10 வரிசைக்கு தள்ளப்பட்டது, இப்பொழுது டாப் 10 வரிசையில் 7 இடத்தை பெற்றுள்ளது.

Vinusha Devi
Vinusha Devi

கடந்த வாரத்தில் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. அதில்‌ சன்டிவியில் கயல் சீரியல் 10.46 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது, சுந்தரி சீரியல் இரண்டாம் இடம் பெற்றுள்ளது, மூன்றாம் இடத்தில் வானத்தைப்போல சீரியலும், ஐந்தாமிடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் இடம்பெற்றுள்ளது, இந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் 8.53 புள்ளிகள் வாங்கி ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த டிஆர்பி வெளியான நாளில் ரோஷினி நடித்திருந்தும் இவ்வளவு பின்னடைவை சந்தித்துள்ளது, அதனால் புதுமுகம் நடிப்பதால் இன்னும் எவ்வளவு பின்னடைவுகள் போகப்போகுதொ என்று குழுவினர்கள் குழம்பி இருக்கிறார்கள்.a

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment