
தேவதையை கண்டேன் சீரியலில் நடித்துவருபவர் நடிகை ஜெயஸ்ரீ. அவரின் கணவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், டிவி நடிகை மகாலட்சுமியுடன் ஈஸ்வர் தவறான உறவில் இருப்பதாகவும், தன்னை கொடுமைபடுத்துவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ பரபரப்பு புகார் கூறினார். அதேநேரம், மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும், தனது மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக ஈஸ்வர் கூறினார்.
சில நாட்கள் ஓய்ந்திருந்த இந்த பிரச்சனை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.