போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு வாங்கிய நயன்தாரா!
கோலிவுட்டில் நட்சத்திர நடிகை அந்தஸ்தை பெற்றிருக்கும் நயன்தாரா நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதில் இருந்து விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் கோலிவுட் சினிமாவின் செலிபிரிட்டி காதலர்களாக பார்க்கப்படுகின்றனர்.
2005ம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஆதவன் , ராஜா ராணி , தனி ஒருவன், நானும் ரௌடி தான் , விஸ்வாசம் உள்ளிட்ட பகல்வேறு திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா அரசியல் செல்வந்தர்களும் நட்சத்திர நடிகர்களும் இருக்கும் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு வாங்கியுள்ளாராம்.
இதையும் படியுங்கள்:வாவ் செம அழகு.. க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட அனுஸ்கா ஷர்மா!!

அபார்ட்மெண்ட்டில் நான்கு படுக்கையறை வசதி கொண்ட இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அரசியலில் தடம் பதித்து அடுத்த ஜெயலிதாவாக தமிழகத்தை ஆள திட்டமிட்டுள்ளாரா நயன்தாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டு அமைதியான அந்த ஏரியாவில் செட்டில் ஆக போகிறேன் என விளக்கம் கொடுத்துள்ளது நயன்தாரா தரப்பு.
