Connect with us
vijay-gautham menon

Cinema News

விஜய் தவறவிட்ட கெளதம் மேனன் படத்தில் நடித்த சிம்பு….

சமீபகாலமாகவே இயக்குனர் என்றால் படத்தை மட்டும் தான் இயக்க வேண்டுமா என்ன? நாங்களும் நடிப்போம் என்பது போலவே இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான கெளதம் மேனனும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கெளதம் மேனன் இயக்குனராக இருந்த போது பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார்.

அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் சிம்பு – திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் தான். தற்போது வரை இப்படம் கோலிவுட்டில் ஒரு காதல் காவியமாக திகழ்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து கெளதம் மேனன் சிம்பு கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான படம் தான் அச்சம் என்பது மடமையடா.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் விண்ணைத் தாண்டி வருவாயா படம் அளவிற்கு அச்சம் என்பது மடமையடா படம் பிரபலமாகவில்லை.

manjima mohan-simbu

manjima mohan-simbu

இந்நிலையில், இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அச்சம் என்பது மடமையடா படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது தளபதி விஜய் தானாம். ஆனால் அந்த சமயத்தில் விஜயால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே, சிம்பு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதுமட்டுமல்ல தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள மாநாடு படத்திலும் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானாம். இந்த கதையை விஜய்க்காக தான் வெங்கட் பிரபு எழுதியுள்ளார். ஆனால் சில காரணங்களால் விஜயால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் தவறவிடும் படங்களை எல்லாம் சிம்பு கைப்பற்றி வருகிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top