Cinema News
மாநாடு இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முதல் முறை பாக்ஸ் ஆபிஸில் இணைந்த சிம்பு படம்…..
கடந்த சில தினங்களாகவே கோலிவுட்டில் பட்டையை கிளப்பி வரும் படம் தான் மாநாடு. சிம்புவை போலவே மாநாடு படமும் பல பிரச்சனைகளை தாண்டி கடந்த 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. நடிகர் சிம்புவும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் முதல் முறையாக இணைந்துள்ள இந்த காம்போ பக்கா மாஸ் காம்போவாக உள்ளது.
இதுவரை தனது படங்களில் அதிரடியாகவும் அடாவடியாகவும் மட்டுமே பேசி வந்த சிம்பு இந்த படத்தில் சற்று அடக்கியே வாசித்து உள்ளார். அதுமட்டுமல்ல இதுவரை நாம் படங்களில் பார்த்த சிம்புவிற்கும் இந்த சிம்புவிற்கும் பயங்கர வித்தியாசம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதேபோல் வெங்கட் பிரபுவும் மிகவும் வித்தியாசமான கதைகளத்தை கையில் எடுத்துள்ளார்.
டைம் லூப் பாணியில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டியுள்ளார். ஹீரோ சிம்புவை விட வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை தான் பலரும் பாராட்டி வருகிறார்கள். மொத்தத்தில் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்ற மாநாடு படம் சிம்புவிற்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
முதல் முறையாக சிம்பு படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான். மாநாடு படம் முதல் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. தற்போது இரண்டு நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 14 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது.
நான் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என கபாலி படத்தில் ரஜினி பேசும் வசனம் தற்போது சிம்புவிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அடுத்தடுத்து தோல்வி படங்கள், பல பிரச்சனைகள் என ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு ஒரு நல்ல கதையை தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளார் என்று தான் கூற வேண்டும்.