Entertainment News
என்ன வேணுமோ எடுத்துக்கோ!…பட்டன கழட்டிவிட்டு போஸ் கொடுத்த வாரிசு நடிகை…
80களில் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. குறிப்பாக கமலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடனும் பல படங்களில் நடித்தவர் இவர். பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜா, மூன்றாம் பிறை, நான் அடிமை இல்லை, பிரியா, குரு, கல்யாண ராமன், ஜானி, அடுத்த வாரிசு என பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே பாலிவுட்டுக்கு சென்று புகழடைந்தார்.
பாலிவுட்டில் நடித்த போது தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்தான் தற்போது அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடைய அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு பக்கம், எப்படியாவது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற எண்ணத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அதேபோல், பொது இடங்களிலும் கவர்ச்சியான உடைகளில்தான் அவர் வலம் வருகிறார். அதிலும், சுற்றுலா சென்றால் பிகினி உடையில் அவர் கொடுக்கும் போஸ் ஒவ்வொன்றும் சூடான ரகம்தான்.
இந்நிலையில், கருப்பு நிற உடையில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.