
பொங்கலையொட்டி வெளியான படம் தர்பார். ரஜினி, நயன்தரா நடிப்பில் முருகதாஸ் இயக்கிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தர்பார் வெளியாகி ஒருவாரம் ஆகியுள்ள நிலையில் வசூல் விபரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரம் இறுதியில் தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் 76 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

கடந்த தீபாவளி அன்று வெளிவந்த விஜய் நடித்த பிகில் திரைப்படம் முதல் வாரம் இறுதியில் 63 கோடி வசூலித்திருந்தது. இதுவே அதிக வசூலாக இருந்தது இந்த நிலையில் தர்பார் வசூல் ரீதியாக பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி மிக பெரிய சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.