விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நான்கு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடைபெற்று வருகிறது. முதல் சீசன் முதல் தற்போது வரை இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்த கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தனிமையில் இருக்கும் கமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதில் பலரின் பெயர் அடிபட்டது. ஆனால் இறுதியில் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளித்தார்.

ஆனால் உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருந்தாராம். சம்பளம் வரை பேசி முடிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் விஜய் சேதுபதி ஷூட்டிங் காரணமாக வரமுடியாது என கூறி மறுத்து விட்டாராம். அதன் காரணமாகவே அவரால் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை.
பின்னர் தான் கடைசி நேரத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் பேசி அவரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த வாரமும் ரம்யா கிருஷ்ணன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக கமல் வரும் வரை இவர் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
