அடிச்சு தூக்கிய ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – இத்தனை கோடி வியாபாரமா?…

Published on: December 12, 2021
kaathu
---Advertisement---

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் இயக்குனராக இடம் பிடித்தார். அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அப்படத்தின் படப்பிடிப்பில் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது. தொடர்ந்து, நயனின் காதலராகவும் ப்ரோமோஷன் பெற்றார்.

தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தில் இவரின் வெற்றி கூட்டணியான விஜய் சேதுபதி, நயனுடன் சமந்தாவும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவற்றை சேர்த்து ஹாட் ஸ்டார் நிறுவனம் ரூ.21 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment