அந்த எக்ஸ்பிரஷன்ஸ் இருக்கே அப்பப்பப்பா… கொள்ளை அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Published on: December 15, 2021
aishwarya rajesh
---Advertisement---

கருப்பு வெள்ளை அழகில் கவர்ந்திழுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஹீரோயின் என்றாலே சிகப்பழகு, கவர்ச்சி உடை ஸ்டைலிஷ் பேச்சு இது அத்தனையும் இருந்தால் தான் நடிகையாகவே முடியும் என்று இருந்த விதியை மாற்றியமைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். டஸ்கி ஸ்கின் அழகு கவர்ச்சி காட்டாத கதாபாத்திரங்கள் எந்த ரோல் என்றாலும் யோசிக்காமல் நடிப்பது என இன்று முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார்.

2010 ல் வெளியான நீதானா அவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். அதையடுத்து காக்கா முட்டை திரைப்படம் அவரை சிறந்த நடிகையாக உயர்த்தி பார்த்தது.

இதையும் படியுங்கள்: பிக்பாஸுக்கு போய் ஆங்கர் வாய்ப்புகளை பறிபோகவிட்ட பிரியங்கா – இனி இவர் தான்!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு சிறப்பாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வளவாக கவர்ச்சி காட்ட மாட்டார். இந்நிலையில் தற்போது அழகாக சேலை உடுத்தி கருப்பு வெள்ளையில் வசீகரிக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ரசனையில் மூழ்கியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CXeKFdBg3rR/

 

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment