சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை விதித்த நீதிமன்றம்….!

Published on: December 24, 2021
ayalaan movie
---Advertisement---

தமிழ் சினிமாவில் மிக பிசியாக வலம் வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. படம் வசூல் தான் ஆனால் சிவகார்த்திகேயனுக்கு எந்த லாபமும் இல்லை.

ஆம் சிவகார்த்திகேயன் சில படங்களை தயாரித்து அதனால் ஏகப்பட்ட கடனில் தவித்து வருகிறார். தற்போது டாக்டர் படம் மூலம் அந்த பிரச்சனை ஓரளவிற்கு குறைந்த தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டான், அயலான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இதுதவிர சிங்கப்பாதை மற்றும் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படி பிரச்சனை இல்லாமல் மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்த சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

ayalaan

ஆம் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது, படத்தை தயாரித்துள்ள 24 ஏஎம் நிறுவனம் பெற்றுள்ள 5 கோடி ரூபாய் கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோர வேண்டும் என டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 5 கோடி ரூபாய் கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை அயலான் படத்தை வெளியிடக்கூடாது என இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment