">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஜன்னலோரத்தில் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் – கனநேரத்தில் நிகழ்ந்த விபரீதம் !
சென்னையில் மயிலாடுதுறைக்கு சென்ற சரன்யா என்ற பெண்ணின் விரல் நசுங்கிய சம்பவமானது ரயிலில் நடந்துள்ளது.
சென்னையில் மயிலாடுதுறைக்கு சென்ற சரன்யா என்ற பெண்ணின் விரல் நசுங்கிய சம்பவமானது ரயிலில் நடந்துள்ளது.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி சரண்யா. இவர் பொங்கல் விடுமுறைக்காக கடந்த 13 ஆம் தேதி சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் ரயிலில் தனது குழந்தையுடன் சென்றுள்ளார்.
அப்போது ரயில் மேடவாக்கத்தைத் தாண்டிய போது திடீரன ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஜன்னல் கதவு தானாக மூடியுள்ளது. இதில் ஜன்னலோரம் கையை வைத்திருந்த சரண்யாவின் கைவிரல் நசுங்கி துண்டானது. இதனால் வலியில் அவர் அலற பயணிகள் டி டி ஆரை தொடர்பு கொண்டு முதலுதவி செய்ய சொல்லியுள்ளனர்.
ஆனால் டி டி ஆரிடம் முதலுதவிப் பெட்டி எதுவும் இல்லாததால் அவருக்கு சிகிச்சை அளிக்கமுடியவில்லை. இதனால் சரண்யா அடுத்த ஸ்டேஷனில் இறக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுள்ளார். இந்த சம்பவத்தால் ரயிலில் பதற்றமான சூழ்நிலை உருவானது.