Connect with us

Bigg Boss

என்ன இப்டி பண்ணிட்டாங்க அபிநய்யின் மனைவி… இந்த பஞ்சாயத்துக்கு பிக்பாஸ் தான் காரணமா ?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பரபரப்பாக 8 போட்டியாளர்களுடன் தன இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

நிகழ்ச்சி ஒரு பக்கம் விறுவிறுப்பாக செல்ல, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்ட மற்ற போட்டியாளர்கள் பேட்டி கொடுப்பது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போடுவது என தங்களை மக்கள் மத்தியில் பிரபல படுத்தி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தாலே வெளியே பஞ்சாயத்து நிச்சயம் என்பது உலகம் அறிந்த ஒன்று தான்.

அந்த வகையில் தற்போது இறுதி போட்டியாளர் பட்டியலில் உள்ள பாவனியிடம் நெருக்கமாக பழகி வந்த அபிநயின் குடும்பத்தில் சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநயின் மனைவி, அபர்ணா அபிநய் என்று பெயர் வைத்து இருந்தார். இந்நிலையில், அபிநய் பெயரை நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என்று மாற்றி இருக்கிறார். அதனால், ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள், பாவனி விவகாரத்தில் உங்கள் மனைவி என்ன சொன்னார் என்று கேட்ட கேள்விக்கு, எல்லா மனைவிமார்களை போலதான் அவரும் ரியாக்ட் செய்தார் என பதிவிட்டு இருந்தார் அபிநய் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Bigg Boss

To Top