
நடிகர் அஜித்தை தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய சினிமா தயாரிப்பாளர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்.
பழம்பெரும் தயாரிப்பாளரும் நடிகருமான கொல்லப்புடி மாருதி ராவ்(80) நேற்று சென்னையில் காலமானார். தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வில்லன், காமெடி, குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அஜித் முதன் முதலாக திரையுலகில் காலடி எடுத்து வைத்த பிரேம புஸ்தகம் திரைப்படத்தை தயாரித்தவர் என்ற பெருமைக்குரியவர். அந்த படத்தை இயக்கிய தனது மகன் பாதியிலேயே இறந்துவிட்டதால் அவர் பெயரில் வருடா வருடம் சிறந்த படங்களை இயக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு விருதுகளை அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி வருகின்றனர்.



