ஊரெல்லாம் ரெய்டு நடத்திய சிபிஐ(?) ஆபிசர்கள் சிக்கினர் –ருசிகர சம்பவம் !

0781fcfeb82ce3af31ca39f02e7fa519

போலியாக சிபிஐ ஆபிசர்கள் என அடையாளம் காட்டிக்கொண்டு மோசடி செய்து வந்த இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் மதீன் மற்றும் ஹரிஹரன். இவர்கள் இருவரையும் வாகன சோதனையின் போது போலிஸார் நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்கள் நாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று பொய் சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் வாகனத்தில் ராணுவம் என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு விசாரணை செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் சிபிஐ அதிகாரிகள் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் வேடம் போட்டு தொழிலதிபர்களின் வீடுகளுக்கு சென்று ரெய்டு என்ற பெயரில் பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல கடந்த வாரம் ஆர் டி ஓ வையே சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories Uncategorized

Leave a Comment