Cinema History
அந்த இயக்குனர் வேண்டவே வேண்டாம்.! ஷ்ரேயா கோசாலை அழவைத்த அந்த இயக்குனர் யார்?
அமீர் இயக்கத்தில் கார்த்தி முதன் முதலாக ஹீரோவாக நடித்து 2007இல் மெகா ஹிட்டான திரைப்படம் பருத்திவீரன். இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். முத்தழகாக நடித்திருந்த பிரியாமணி தேசிய விருது வரை வாங்கியிருந்தார்.
இந்த படம் பற்றியும் படத்தில் யுவனுடன் சேர்ந்து இசையமைத்த அனுபவம் பற்றியும் பருத்திவீரன் பட இயக்குனர் அமீர் நிறைய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில், ஸ்ரேயா கோஷல் பாடியிருந்த அய்யயோ பாடல் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார்.
அமீர் எப்போதும் பாடகர்களுக்கு பாடல் பதிவின் போது கரெக்சன் சொல்லுவாராம். அப்போது ஸ்ரேயா பாடும் போது அவர் தனக்கே உரித்தான ஸ்டைலாக பாடலை பாடியுள்ளார். அமீர் கரெக்சன் சொல்லி சொல்லி நொந்து போய், ஷ்ரேயாவிடம் , இந்த சீனில் பாடலை பாடுவது ஷ்ரேயா கோஷல் இல்ல முத்தழகு இந்த பாடலை படுகிறார். அதனால், பாடலை மாற்றி பாடும் படி கூறியுள்ளார்.
கடைசியில் ஷ்ரேயா அழுதேவிட்டாராம். அமீர் ஸ்ரேயாவை சமாதானம் செய்து, பாடல் பதிவு வேண்டாம். நான் வேறு ஒரு ஆளை வைத்து பதிவு செய்து கொள்கிறேன். என கூறி ஊருக்கு போக சொல்லிவிட்டாராம். இதனால் கோபமான ஷ்ரேயா கோஷல் மீண்டும் காலையில் வந்து நானே பாடுகிறேன் என கூறி. காலையில் நன்றாக பாடிவிட்டாராம். அந்த பாடல் தான் நாம் தற்போது கேட்டு மகிழும் அய்யயோ மெலடி பாடல்.
அதற்கு பிறகு அமீர் இயக்குனர் என்றால் என்னை கூப்பிடாதீர்கள் என கடித்துக்கொண்டு சென்றுவிட்டாராம். ஆனால், திரும்பவும் 7 வருடங்கள் கழித்து அமீரின் ஆதிபகவன் திரைபடத்தில் ஷ்ரேயா பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.