Connect with us

Cinema News

இந்த 7 விஷயத்தை என்னால் செய்யாமல் இருக்க முடியாது.! சமந்தாவின் அந்த ‘7’.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினி உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பிற்கு மட்டுமல்ல நடனத்திற்கும் ரசிகர்கள் ஏராளம். அதற்கு ஓர் உதாரணம் தான் ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா பாடலின் அதிரி புதிரி ஹிட்

இவர் சமீபத்தில் தான் தனது கணவர் நாகசைதன்யாவை விட்டு பிரிந்தார். தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர் தான் எப்படி சினிமாவில் ஓர் நல்ல இடத்தை தக்கவைத்து கொள்ள முடிகிறது என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில் தான் தினமும் ஒரு 7 விஷயங்களை தவறாமல் கடைபிடிப்பேன் அதுதான் எனது வெற்றியின் ரகசியம் என கூறியுள்ளார். அவை,

தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவாராம். அடுத்து, தினமும் அந்த நாளுக்கான திட்டமிட்டலை செய்து விடுவாராம். இன்றைக்கு என்னென்ன செய்ய போகிறோம் எனபதை குறித்து கொள்வாராம். சாப்பிடுவது பெரும்பாலும் சைவ உணவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வாராம். சமந்தா இரக்க குணம் அதிகம் கொண்டவர். அதனால், அடுத்தவர்களை குறை கூறாமல் இருக்க தானே பிரச்சனைகளை சரி செய்ய முயற்சிப்பாராம். என்னால் முடியும் என சவாலான காரியங்களை எப்படி செய்ய முடியும் என சிந்தித்து செயலாற்றுவாராம். தனக்கு போட்டி தானே ஆதலால், தன்னை பலமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்வாராம். தினமும் ஏதேனும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்வாராம்.

இவை தான் அந்த 7 பழக்க வழக்கங்களாம். இதனை சமந்தா ரசிகர்களும் பின்பற்றினால் நன்றாக தான் இருக்கும்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top