Connect with us

latest news

முதல் நாளே என்னை தப்பா நெனச்சிட்டார்.! கே.எஸ்.ரவிக்குமாரின் படையப்பா நினைவுகள்.!

கே.எஸ்.ரவிக்குமார் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் மறக்க முடியாத மைல் கல் படையப்பா திரைப்படம் தான். அது அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத திரைப்படம். இந்த படத்தின் மூலகதையை ரஜினிகாந்த் தான் தயார் செய்து கே.எஸ்.ரவிகுமாரிடம் கூறியுள்ளார்.

பிறகு அதனை டெவலப் செய்து, கே.எஸ்.ரவிக்குமார் படையப்பா எனும் மெகா ஹிட்டை ரசிகர்களுக்கு கொடுத்தார். இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த படத்தின் அனுபவங்களை பகிர்ந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், படையப்பா படத்தில் சிவாஜி சாரின் முதல் நாள் படப்பிடிப்பில் அவர் மலைக்கோவில் மேலிருந்து கீழே வந்து சேரில் உட்கார வேண்டும் அதன் சீன்.

பின்னாடியில் இருந்து யாரும் வந்தவிட கூடாதென அசிஸ்டென்ட்களிடம் சொல்லிவிட்டேன். ஐயர் வேடம் அணிந்திருந்த ஜூனியர் நடிகர்கள் அந்த வேலையை செய்து வந்தனர். ஆனால், மூத்த துணை நடிகைகைகள் எல்லாம் வந்துவிட்டதால் ஜூனியர் நடிகர்கள் அவர்களை தடுத்து நிறுத்த வில்லை.

ஷாட் எடுத்துக்கொண்டிருக்கும் போது துணை நடிகைகள் ப்ரேமுக்குள் வந்துவிட்டதால் ஷூட்டிங் தடைபட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த ஐயர் வேடமிட்டு இருந்த நடிகர்களை கே.எஸ்.ரவிக்குமார் கோவத்தில் அடித்துவிட்டாராம். இதனை பார்த்த சிவாஜி , என்னப்பா இவன் மோசமானவனா இருக்கான். ஐயரெல்லாம் அடிக்கிறான் என ரஜினியிடம் கூறியுள்ளார்.

பிறகு தான் தெரியவந்துள்ளது அடிவாங்கியது ஜூனியர் நடிகர்கள் தான் ஒரிஜினல் ஐயர் கிடையாது என்ற செய்தி. அதன்பிறகு சிவாஜி கணேசனும் , கே.எஸ்.ரவிக்குமாரும் நெருங்கிய நண்பர்கள் போல மாறிவிட்டனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in latest news

To Top