நடிகை தமன்னா தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுல படங்களில் தான் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் இவர் கனி எனும் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார்.
இந்த பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக தெலுங்கில் எப் 3 மற்றும் போலா சங்கர் எனும் ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ஸ்ருதிகாசன் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் தமன்னா நடிக்கிறாராம்.

அது போல குயின் எனும் ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான தட்டிஸ் மகாலட்சுமி எனும் படத்திலும், ஜெனிலியாவின் கணவருடன் இணைந்து பிளான் ஏ பிளான் பி எனும் ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறாராம். அது போல நவாசுதீன் சித்திக் உடன் இணைந்து ஒரு படத்திலும் தமன்னா நடித்து வருகிறாராம்.
