நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்போது விக்ரம் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் கமல்ஹாசன் அவர்கள் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் இடையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
![]()
இரு வாரங்களுக்கு பின்புதான் உடல்நிலை சரியாகி மீண்டும் சூட்டிங்கிற்கு சென்றார். இந்நிலையில் தற்போது கமல் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டு வரும் விக்ரம் படப்பிடிப்பில் கமல் சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம்.
அதாவது படப்பிடிப்பிற்கு வரக்கூடிய நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளாராம். பரிசோதனை தொகை அதிகம் என்பதுடன், தினமும் எப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என படக்குழுவினர் இடையே அதிருப்தி எழும்பியுள்ளது.