">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி – மீண்டும் வருகிறார் டிவில்லியர்ஸ் !
தென் ஆப்பிரிக்க அணியின் தூணாக விளங்கிய ஏ பி டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் மீண்டும் விளையாடுவார் எனத் தெரிகிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் தூணாக விளங்கிய ஏ பி டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் மீண்டும் விளையாடுவார் எனத் தெரிகிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் தற்போதைய வீழ்ச்சிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் இல்லாததும் காரணம். அந்நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டார். ஆனால் அதன் பின் உலகக்கோப்பை தொடரில் விளையாட கேப்டன் டு பிளசீஸ் மூலம் தூதுவிட்டார். ஆனால் அவரை வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தென் ஆப்பிரிக்காவும் உலகக்கோப்பையில் மிக மோசமாக விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது.
அதன் பின் நடந்த எந்தவொரு தொடரிலும் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் டி 20 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அந்த அணியின் கேப்டன் டூ பிளசீஸ் இது குறித்து டிவில்லியர்ஸோடு பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியுள்ளார். அணியின் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது டிவில்லியர்ஸ் விளையாடுவதை வாரியமும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றே தெரிகிறது.